அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வாய்ப்பு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

Anura Kumara Dissanayaka Government Employee Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Dilakshan Mar 15, 2026 04:54 PM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத் தொடர்ந்து கண்காணித்து ஒரு நாடாக அவற்றுக்குக் கூட்டு முயற்சியுடன் முகம் கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலின் போது எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

எரிபொருளுக்கான QR! நிரப்பு நிலையங்களுக்கு வெளியான எச்சரிக்கை

எரிபொருளுக்கான QR! நிரப்பு நிலையங்களுக்கு வெளியான எச்சரிக்கை


எரிபொருள் தேவைகள்

சுகாதார சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக அத்தியாவசிய எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாகப் பேணுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வாய்ப்பு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல் | Possibilities For Govt Employees To Work From Home

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.

விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டிஜிட்டல் குறியீட்டு (QR) முறையை விரைவாக முறைப்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உர விநியோகத்திற்கும் QR முறைமை

உர விநியோகத்திற்கும் QR முறைமை

வழமைக்கு திரும்பிய எரிபொருள் QR குறியீடு : வெளியான அறிவிப்பு

வழமைக்கு திரும்பிய எரிபொருள் QR குறியீடு : வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023