வாகன இறக்குமதி தடையின் எதிரொலி: ஏற்படப்போகும் புதிய சிக்கல்
வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும், தற்போதுள்ள கடன் கடிதங்களை இரத்து செய்வதற்கும் எடுக்கப்பட்ட தீர்மானம் காரணமாக, வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்கும் போது ஜப்பானிய தரப்பிலிருந்து தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது, வாகன இறக்குமதியாளர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், தற்போது வாகனங்களை வாங்குவதற்கு முன்பணம் செலுத்துவதும் வீண் செயல் என அவர்கள் கூறியுள்ளனர்.
அமைச்சரவையின் அங்கீகாரம்
பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு பல வருடங்களின் பின்னர் கட்டுப்பாடுகளை தளர்த்தாமல் 04 வகைகளின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாக கடந்த வருடம் மே மாதம் அறிவிக்கப்பட்டது.
பின்னர் இந்த ஆண்டு பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அமைச்சரவையின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |