அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்! நாட்டை முடக்கத் திட்டம்? இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதற்கும் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்குமான எந்தவொரு திட்டமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், எனினும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதன் மூலம் கொரோனா தொற்றுச் சவாலை சமாளிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை ஏப்ரல் 30ஆம் திகதியின் பின்னர் மக்கள் பொது இடங்களில் நடமாட வேண்டுமாக இருந்தல் முழுமையான தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு வர்த்தமானி ஊடாக இன்று காலை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான செய்திகளைப் பெற கீழுள்ள லிங்கினை அழுத்தவும்
தடுப்பூசி பெறாதவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை! வெளியான வர்த்தமானி (படங்கள்)
