மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாகிய தமிழக ஆளுநர் : ஸ்ராலின் விசனம்
தமிழக ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய ஒன்று என முதல்வர் மு.க.ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த பொறுப்பில் இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும் என நேற்று சட்டப்பேரவையில் பேசிய அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடும் மோதல்
மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “தமிழக ஆளுநராக இருப்பவர் மத்திய அரசில் அவருக்குள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி தமிழக அரசுக்கு நிதி பெற்றுக் கொடுக்கலாம்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஆளுநர் பாலமாகச் செயல்படலாம்.
எவ்வாறாயினும், தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தற்போது கடும் மோதல் நிலவி வருகிறது.
இந்த பின்னணியில், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி திருப்பியனுப்பிய 10 சட்ட மூலங்கள் மீண்டும் தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை
இந்த நிலையில், ஆர்.என்.ரவி, மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். நாள்தோறும் யாரையாவது கூட்டி வைத்துக் கொண்டு அவர் வகுப்பு எடுக்கிறார்.
எனினும், அரசின் கொள்கைகள் குறித்து பொது வெளியில்
விமர்சிப்பது சரியல்ல.
இந்திய நாடு இதுவரை கண்டிராத முன்னோடி திட்டங்கள்
தற்போது கொண்டு வரப்பட்டுள்ளதாக ஸ்ராலின் மேலும்
சுட்டிக்காட்டியுள்ளார்.