அனைத்து தபால் ஊழியர்களுக்குமான விடுமுறைகள் ரத்து!
புதிய இணைப்பு
8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை தபால் மா அதிபர் ருவன் சத்குமார எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த வேலை நிறுத்தப் போராட்டமானது, நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்: ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தீர்மானம்
அத்தோடு, கண்டியில் உள்ள தபால் நிலையங்களும் விற்பனை செய்யத் தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நுவரெலியாவின் அடையாள சின்னமாக கடந்த 130 வருடங்களுக்கு மேலாக திகழும் நுவரெலியா தபால் நிலையத்தினை விற்பதற்கு எதிராக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலரும் இன்று தபால் நிலையத்திற்கு முன்பாக கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது