பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கெதிரான பொலிஸாரின் மனு! நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு

srilanka polikandi poththuvil
By Vasanth Feb 05, 2021 08:12 AM GMT
Report

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த தடை உத்தரவு கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி பொலிஸார் முன்வைத்த விண்ணப்பங்களும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பமே நிராகரிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன. ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு சதி ஏற்படுத்தும் முயற்சியை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முயற்சிக்கின்றனர் என்று பொலிஸார் நீதிமன்றில் எடுத்துரைத்தனர்.

இலங்கை அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஒன்றுகூடும் உரிமையை பொலிஸாரின் தடை உத்தரவு கோரிக்கை மறுக்கின்றது. அத்துடன், ஒரு இனம் நாட்டுக்கு சதி செய்வதாக பொலிஸார் எண்பிப்பது ஏனைய இனங்களுக்கு வெறுப்புணர்வைத் தூண்டும்.

கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பில் பேரணி இடம்பெறும் இடங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை.

அதனால் பொலிஸார் தாக்கல் செய்த அடிப்படையற்ற விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று சட்டத்தரணி கேசவன் சயந்தன், நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த சாவகச்சேரி நீதிவான் பொலிஸாரின் தடை உத்தரவு கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

இதேபோன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி பொலிஸார் தாக்கல் செய்த பேரணிக்கான தடை உத்தரவு விண்ணப்பங்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

மூத்த சட்டத்தரணிகள் என்.சிறிகாந்தா, வி.திருக்குமரன் மற்றும் சில சட்டத்தரணிகள் முன்னிலையாகி ஆட்சேபனை தெரிவித்து நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பம், சட்டத்தரணிகளின் ஆட்சேபனையை ஆராய்ந்த மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, பொலிஸாரின் விண்ணப்பங்களை நிராகரித்து கட்டளை வழங்கினார்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் போராட்டம் மூன்றாம் நாளான இன்று காலை திருகோணமலையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பொலிகண்டியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது. T

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்