பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து! 8, 200 உயிர்கள் பலி
Death
Gampaha
SriLanka
chicken farm
Gottadheniyawa
waragala
By Chanakyan
கம்பஹா - கொட்டதெனியாவ - வரகல பகுதியிலுள்ள கோழிப் பண்ணையொன்றில் தீ பரவியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீப் பரவலினால், குறித்த கோழிப் பண்ணையிலிருந்த 8,200 கோழிகள் இறந்துள்ளதாக தெரியவருகின்றது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில காலமாக நாட்டில் தற்போது தீ விபத்துக்களும் வெடிப்புச் சம்வங்களும் அதிகரித்துள்ளதுடன், மனித மரணங்களும் கடல்வாழ் உயிரினங்களின் மரணங்களும் அதிகரித்தக் கொண்டே செல்கின்றது.
இந்த நிலையில் குறித்த விபத்து ஏற்பட்டு 8,200 கோழிகள் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்