மின்சாரத்தை கொள்வனவு செய்யும் இலங்கை அரசு - மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், அவசர மின்சார கொள்வனவின் மூலம் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இதனை, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கப்பல்
மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வெளிநாட்டு கப்பல்களில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இவ்வாறு மின்சாரக் கப்பல்களில் இருந்து மின்சாரம் பெரும் செயற்பாடுகள் நடைபெற்றதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்படுகின்ற இயந்திரக்கோளாறுகள் மற்றும் நிலக்கரித் தட்டுப்பாடு என்பவற்றை கருத்தில்கொண்டே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிலக்கரியை கொண்டுவரும் நடவடிக்கை
இதேவேளை, அனல் மின்நிலையங்களில் ஏற்பட்டுள்ள நிலக்கரிகளுக்கான தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக ரஞ்சன் ஜெயலால் கூறியுள்ளார்.
இதற்காக திருகோணமலைத் துறைமுகத்திற்கு நிலக்கரியை கொண்டுவந்து அங்கிருந்து பாரவூர்திகள் மூலம் நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கரியை அனல் மின் நிலையத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்திற்கு அதிக பணம் செலவாகும் எனவும் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
