மின் நெருக்கடி அதிகரிக்கும் - பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு
எதிர்காலத்தில் மழை பெய்யாவிடில் மின்சார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என பொதுப் பயன்பாடுட்டு ஆணைக்குழு(PUCSL) தெரிவித்துள்ளது.
நீர் மின் நிலையங்களில் உள்ள நீர் இன்னும் 10 நாட்களுக்கே போதுமானதாக இருக்கும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கெலவரப்பிட்டி அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் டீசல் கிடைக்காவிட்டால் மின்சார உற்பத்தியில் தாமதம் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது நீர் மின்சாரத்தில் இருந்து 9 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் நாட்களில் மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தியில் சிக்கல்கள் உண்டாகும் எனவும் குறிப்பிட்டார்.
கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி ஆலை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
