நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை
நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு (Colombo), களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் பியகம - பன்னிபிட்டிய பிரதான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.
எனினும், பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகத்தை மீட்டமைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) அறிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு
பியகம - பன்னிபிட்டிய பிரதான மின்சார கட்டமைப்பு, இலங்கையின் மின் விநியோக அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கொழும்பு, களுத்துறை, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டது.
இந்த இடையூறு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, மின் விநியோகத்தை மீட்டமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் மீட்டமைக்கப்பட்டுள்ள போதும் சில பகுதிகளில் மின் விநியோகம் முழுமையாக மீட்டமைக்கப்படுவதற்கு மேலதிக நேரம் தேவைப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
You may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 6 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்