மின் தடை தொடர்பில் மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான அறிவிப்பு!
நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் மின்தடையானது இன்று இரவு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று பகல் வேளையில் A, B மற்றும் C ஆகிய பகுதிகளுக்கு மாத்திரம் இரண்டு மணித்தியாலம் முப்பது நிமிடங்கள் வரை மின்தடை ஏற்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறையினால் சில மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளன, இதன் காரணமாகவே மின்துண்டிப்பு நாட்டில் ஏற்படுகின்றது.
மேலும் நாளை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பு நேர அட்டவணையின்படி குறிப்பிட்ட பகுதிகளில் மின்துண்டிப்பு ஏற்படக்கூடுமென மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் டீசல் ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் 35, 300 மெற்றிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று நேற்று நாட்டை வந்தடைந்ததாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
