நாளைய மின் துண்டிப்பு விபரம் வெளியீடு
3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை
நாளைய தினம்(22) 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களில் காலை வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.
அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்ப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபை கோரிக்கை
அத்தோடு, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5 மணிமுதல் காலை 8 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்