புலனாய்வு அதிகாரி சுட்டுக்கொலை : ரஷ்ய முகவர்களை தீர்த்துக்கட்டியது உக்ரைன்
கடந்த வியாழக்கிழமை ஒரு மூத்த உக்ரைனிய உளவுத்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ரஷ்யாவிற்காக பணிபுரியும் இரண்டு முகவர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இன்று (13)ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்படுவதை எதிர்த்த ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவையில் பணிபுரியும் இரண்டு முகவர்கள் கண்காணிக்கப்பட்டு "சுட்டுக்கொல்லப்பட்டனர்" என்று உக்ரைனின் பாதுகாப்பு சேவையின் (SBU) தலைவர் வாசில் மல்யுக் ஒரு காணொளி அறிக்கையில் தெரிவித்தார்.
பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட புலனாய்வு அதிகாரி
தலைநகர் கீவ் இல் உள்ள கார் நிறுத்துமிடத்தில் பட்டப்பகலில் கேணல் இவான் வோரோனிச்சை பலமுறை சுட்டுக் கொன்ற பிறகு, அடையாளம் தெரியாத ஒரு தாக்குதல்காரர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய பின்னர் இது நிகழ்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, உக்ரைனின் தேசிய காவல்துறை கொல்லப்பட்ட இரண்டு முகவர்களும் "ஒரு வெளி நாட்டின் குடிமக்கள்" என்று கூறியது, மேலும் எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. சம்பவம் தெடர்பில் ரஷ்ய தரப்பிலிருந்து உடனடி பதில் எதுவும் வெளியாகவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

