இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ஜனாதிபதிக்கு காயம்
கடந்த மாதம் இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியான் காயம் அடைந்தாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் (Iran) அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், இதனால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் எனக்கூறி கடந்த மாதம் அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ட்ரோன், ஏவுகணைகள் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடந்தது.
இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டதுடன், இதில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
ஈரான் தேசிய கவுன்சில்
இதையடுத்து அமெரிக்காவின் தலையீட்டால், இரு தரப்புக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியான், ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமது பாகேர், நீதித்துறை தலைவர் மோசெனி எஜெய் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஈரான் தேசிய கவுன்சில் கூட்டம் நடந்தது.
இக்கூட்டம் நடந்த கட்டடத்தை குறிவைத்து, ஆறு ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவியது. உடனடியாக ஆபத்து கால வழியாக அங்கிருந்த அனைவரும் வெளியேறினர்.
ஈரான் புரட்சிகரப்படை
இருப்பினும், ஜனாதிபதி மசூத் பெஸ்கியான் உட்பட சிலர் காயமடைந்தனர் என ஈரான் புரட்சிகரப்படையுடன் தொடர்புடைய அமைப்பு தற்போது செய்தி வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் தன்னை கொல்ல சதி செய்வதாக மசூத் பெஸ்கியான் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தத நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

