பாலச்சந்திரன் - இசைப்பிரியா படுகொலை : நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி

Sri Lanka Sri Lanka Final War
By Raghav Jul 13, 2025 03:24 AM GMT
Report

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார்.

தமது முறைப்பாடு குறித்து, காவல்துறையினர் இதுவரையில் உரிய பதில் வழங்காமையினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடி, நீதிப்பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக முறைப்பாட்டாளர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, எதிர்வரும் வாரத்தை மாத்திரம் காவல்துறையினருக்கான கால அவகாசமாக வழங்கவுள்ளதாகவும், அதற்குள் பதில் கிடைக்காவிடின் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

யுத்தத்தில் இஸ்ரேலைக் கைவிட்ட அதனது வான்படை!

யுத்தத்தில் இஸ்ரேலைக் கைவிட்ட அதனது வான்படை!

சட்டத்தரணி

தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்ற சட்டத்தரணியினால், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் திகதி இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பான முறைப்பாடு, பதில் காவல்துறைமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

பாலச்சந்திரன் - இசைப்பிரியா படுகொலை : நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி | Balachandran Isaiapriya Murder Case

மேலதிக நடவடிக்கைகளுக்காக, குறித்த முறைப்பாடு சட்டப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஏற்கனவே, சட்டத்தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இறுதிப்போரின் போது, சரணடைந்தவர்கள், சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டுள்ளதாகக் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதில், பிரதானமாக, இசைப்பிரியா எனப்படும் ஷோபா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியா 2009 ஆம் ஆண்டு மே மாதம் உயிருடன், நிராயுதபாணியாக, காவலில் இருந்ததாகவும், பின்னர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்ததாகவும் காணொளி ஆதாரங்கள் காட்டுவதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆட்டம் காட்டும் தேங்காய் விலை : வெளியான தகவல்

ஆட்டம் காட்டும் தேங்காய் விலை : வெளியான தகவல்

இசைப்பிரியா - பாலச்சந்திரன் கொலை

இந்தக் காட்சிகளின் அடிப்படையில், அவர் பாலியல் வன்புணர்வு மற்றும் மரணதண்டனை பாணியில் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான தடயங்களைக் காணமுடிகிறது. 

பாலச்சந்திரன் - இசைப்பிரியா படுகொலை : நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி | Balachandran Isaiapriya Murder Case

அதேநேரம், 12 வயதுடைய பாலச்சந்திரன், உயிருடன் ஆயுதமேந்திய படையினர் வசமிருந்தமையும், பின்னர் அவர் மார்பில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்து காணப்படுவதையும் காட்டும் புகைப்படங்கள் உள்ளன. 

இதுபோன்ற செயல்கள் நிரூபிக்கப்பட்டால், சர்வதேசச் சட்டத்தின் கீழ், அவை போர்க்குற்றங்களாகக் கருதப்படும் எனவும், ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் ரோம் சாசனம் ஆகிய இரண்டையும் மீறுவதாக உள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், இலங்கை காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து, உண்மை மற்றும் பொறுப்புடன், நியாயத்துக்கு வழிவகுக்கும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முறைப்பாட்டாளரான, சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே கோரியுள்ளார்.

மீண்டும் தாக்க முடியும் : மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்களுக்கு மிரட்டல் விடுத்த ஈரான்

மீண்டும் தாக்க முடியும் : மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்களுக்கு மிரட்டல் விடுத்த ஈரான்

பறவைகள் பூங்காவை சுற்றிவளைத்த காவல்துறைக்கு காத்திருந்த ஆச்சரியம்!

பறவைகள் பூங்காவை சுற்றிவளைத்த காவல்துறைக்கு காத்திருந்த ஆச்சரியம்!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025