கோட்டாபயவுக்கு எதிராக அவரது மருமகனே வாக்குமூலம்! தீவிரமடையும் விசாரணை
கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அவரது சகோதரியின் மகன் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
அவரது சகோதரியின் மகனால் இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் கோட்டாபயவுக்கு எதிராக மற்றுமொரு சட்ட சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
சுகீஸ்வர பண்டார மீதான குற்றச்சாட்டு
கோட்டாபயவின் முன்னாள் செயலாளரான சுகீஸ்வர பண்டார மீதான நிதிமோசடி குற்றச்சாட்டு குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாக்குமூலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றி அதற்காக அவர் சம்பளம் பெற்றுள்ளார்.
அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஒப்பற்ற ஒரு பதவியை உருவாக்கி சம்பளத்தை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்களில் அம்பலமாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக விசேட திட்டங்கள் என்ற பெயரில் நூற்று முப்பத்து ஏழு பேருக்கு வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக இந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த பணிக்காக 17 கோடிக்கும் அதிகமான அரச பணம் செலவிடப்பட்டுள்ளது.
24 கோடிரூபாய் அரசப்பணம்
மேலும் அவரது வாகனத்தின் பராமரிப்பு செலவுக்காக 59 இலட்சம் ரூபாய் பராமரிப்பு செலவுகள் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு மொத்தமாக 24 கோடிரூபாய் அரசப்பணம் செலவிடப்பட்டுள்ளதாக சுகீஸ்வர மீது குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் சுயாதீனமாக வேலை செய்ததாகவும் சம்பளம் எதையும் பெறவில்லை எனவும் சுகீஸ்வர கூறியதால் கோட்டபாய இது குறித்த விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
இதன்போது சுகீஸ்வரவுக்கு சம்பளம் வழங்கப்பட்டதாக முன்னதாக கூறியதாகவும் பின்னர் தாம் வழங்கிய சாட்சியங்களை கோட்டபாய மாற்றி தனது சகோதரியின் மகனுக்கு வழங்கியதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே கொழும்பு குற்றவிசாரணைப்பிரிவில் முன்னன்னிலையான சகோதரியின் மகன், கோட்டாபய கூறியது முழு பொய் என்றும் தனக்கு ஒரு சதம் கூட வழங்கவில்லை என கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பணத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் வழங்கப்பட வேண்டிய நிலை கோட்டபாயவுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |