அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய பிடியாணை - நாடாளுமன்றத்தில் அமளி துமளி
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள விவகாரம் குறித்து நாடளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்தது.
கோட்டை காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மோசமான முன்னுதாரணம்
இந்நிலையில், இன்று நாடாளுமன்ற அமர்வு இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விவாதமொன்றில் கலந்துகொண்டிருக்கும்போது அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பது மோசமான முன்னுதாரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடினார்.
இதன்போது குறுக்கிட்ட பிரதியமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் விசேட தேவைகள் இருந்தால் தவிர அவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |