மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
Jaffna
Power cut Sri Lanka
Sri Lanka
Power Cut Today
Northern Province of Sri Lanka
By pavan
மின் கட்டணம் நிலுவையில் வைத்திருக்கும் யாழ் மக்களுக்கு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் 5 ஆயிரம் ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்புக்கள் எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி – தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
குற்றப் பணம்
5 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான மின் கட்டண நிலுவை வைத்திருப்போர் அவற்றை எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமைக்கிடையில் அவற்றை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதனை மீள இணைப்பதற்கு குற்றப் பணமாக 3 ஆயிரம் ரூபா மின் கட்டணத்துக்கு மேலதிகமாக செலுத்த வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

