வார இறுதி நாட்களில் மின்சார தடை இல்லையா? வெளியான தகவல்
வார இறுதி நாட்களில் மின்சார தடையை தவிர்க்குமாறும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபையிடம் கோரியுள்ளது.
அவ்வாறு தவரிர்க்க முடியாத பட்சத்தில் மின்சார தடை ஏற்படுத்தும் நேர எல்லையை குறைக்குமாறும் இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மின்சார தடை காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டே, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருவதுடன் நாளுக்கு நாள் மின்தடையின் கால எல்லை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இதனால் தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களும் காணொலி ஊடாக நிகழ்த்தப்படும் வகுப்புக்களும் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் சுகாதார துறையும் பாதிக்கப்படுவதுடன் தடுப்பூசிகளை பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
