உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பு: மனோகணேசன்,ஹக்கீமுடன் திரைக்குப் பின்னால் அநுரவின் டீல்
அண்மையில் நடைபெற்று முடிந்ந உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (anura kumara dissanayake)தனிப்பட்ட முறையில் தலையிட்டு ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சி அமைப்புகள், எதிர்க்கட்சிகள் அதிக பெரும்பான்மையைக் கொண்ட சபைகளில் அதிகாரத்தை நிறுவுவதற்கான திட்டங்களைத் தயாரித்து வருகின்றன.
அநுரவுடன் கலந்துரையாட வாய்ப்பு
இதேவேளை அரசாங்கத்தின் பிராந்தியத் தலைவர்கள் குறிப்பாக பிரதான எதிர்க்கட்சிகளை தவிர்த்து தெரிவு செய்யப்பட்ட சுயேட்சை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது அந்த உறுப்பினர்களின் ஆதரவை சுயாதீனமாகப் பெறுவதற்காகவாகும்.
மேலும், சுயேட்சைக் குழுக்களுக்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்தவும், பெலவத்தை தலைமை அலுவலகத்தில் ஜே.வி.பியின் மூத்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மனோகணேசன்,ஹக்கீமுடன் திரைக்குப் பின்னால் இரகசிய விவாதங்கள்
எனினும், தற்போது மௌனக் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மனோ கணேசன்(mano ganeshan) தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் திரைக்குப் பின்னால் இரகசிய விவாதங்கள் நடைபெற்று வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
