உலகை மிரட்டும் சக்திவாய்ந்த நில அதிர்வுகள்..! அடுத்தடுத்து 3 நாடுகளில்...
உலகப் பரப்பில் கடந்த சில நாட்களாக சக்திவாய்ந்த நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன.
நேற்றும்(15) இன்றும்(16) 3 இடங்களில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
டோங்கா தீவு
தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க மேற்கு கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா அல்லது அலாஸ்காவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
பிஜி தீவுகள்
இதற்க்கு முன்னதாக, பிஜி தீவுகளுக்கு தெற்கே இன்றைய தினம், 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 188 கிமீ (116.82 மைல்) ஆழத்தில் இருந்தது.
இது ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்பட்டாலும், அமெரிக்க மேற்கு கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியா
அத்துடன், நேற்றைய தினமும் இந்தோனேசிய தலைநகர் மணிலாவில் இருந்து தென்மேற்கே 140 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹூகேவில் 6.2 ரிக்டர் அளவில், 120 கி.மீ. ஆழத்தில் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
