நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -மக்கள் அச்சம்
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று திடீரென்று பூமி குலுங்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.9 என பதிவானதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு
Prelim M6.9 earthquake has occurred in the Kermadec Islands, N of New Zealand. This earthquake was reported felt by over 500 people along the E.coast of the N.Island and the Wellington region. If you felt it, please report it below to Geonet. https://t.co/2if8hTuMI5 pic.twitter.com/9A2xgAXUyD
— james dyson (@jamesdyson22) March 4, 2023
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகள் உள்ளன. இந்நிலையில் இன்று கெர்மடெக் தீவு பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.9 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 152 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் அதிஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் சேத பாதிப்பு பற்றிய எந்த விபரமும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
