பிரபாகரன் விடயத்தில் தயக்கம் காட்டும் சிறிலங்கா
ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை தமிழ் மக்களுக்காக இந்த மண்ணிலே முன்னெடுத்த தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடைய மரபணு அறிக்கையை வெளியிடுவதில் இந்த அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது.
இந்த தயக்கம் ஏதோ ஒரு உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வழக்கு விசாரணக்காக நீதிமன்றம் வருகை தந்து, வழக்கு விசாரணைகளின் பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மரபணு அறிக்கை

| இறுதி யுத்தத்தில் பிரபாகரனுக்கு என்ன நடந்தது - பச்சைப் பொய் சொல்கிறதா அரசாங்கம் |
தாங்கள் முன்னாள் போராளிகளான கருணா மற்றும் தயா மாஸ்டர் ஆகியோர் மூலம் அதனை வெளிப்படுத்தி இருப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.
அவர்கள் பார்வையிடலாமே தவிர மரபணு அறிக்கையை வெளியிடக்கூடிய அளவிற்கு அவர்கள் நிபுணர்கள் அல்ல. அத்தோடு அவர்களுக்கு வைத்திய அறிவும் கிடையாது.
ஆகவே அரசாங்கம் தான் தெளிவான எண்ணத்தைக் கொண்டிருந்தால், உண்மை என்றால் உண்மையை வெளியிடுவது பொருத்தமானது” என்றார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 19 மணி நேரம் முன்