தவிசாளரை தொடர்ந்து 7 பிரதேச சபை உறுப்பினர்கள் இராஜினாமா!
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு (09) இன்று அனுப்பி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி.எம்.சஹீல், எம்.எஸ்.சரீபா, எம்.ரீ.பெளசுள்ளாஹ், கே.எம்.இன்பவதி, என்.கோவிந்தசாமி, கே.குலமணி, ஆர்.வளர்மதி ஆகியோர்கள் தங்களின் இராஜினாமா கடிதத்தையும் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் இடம் இன்று கையளித்தனர்.
பிரதேச சபை உறுப்பினர்கள் இராஜினா
இவர்களது இராஜினாமா கடிதங்கள் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும்20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் தென்படுகின்றது.
அவ்வாறு கலைக்கப்படாவிட்டாலும் கூட எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
