யாழில் குப்பைகளை அகற்ற பின்னடிக்கும் பிரதேச சபை - மக்கள் விசனம்
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகள் குப்பைக் காடாக காட்சி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலின் காரணமாக பெருமளவான குப்பைகள் குடிமனைக்குள் அடித்து வரப்பட்டன.
இதனை உடன் அகற்றுமாறு அல்லது எரியூட்டுமாறு உரிய தரப்பினருக்கு பொதுமக்களால் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தன.
குப்பைகள் அகற்றப்படுமென பிரதேசசபையால் தெரியப்படுத்தப்பட்ட போதும் பல நாட்கள் கடந்தும் பிரதேச சபையால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குப்பைகள் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளில் தேங்கி காணப்படுகிறது. இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கான அறிகுறிகள் குறித்த பிரதேசத்தில் நிலவுகின்றது.
மீண்டும் யாழ் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த குப்பைகள் அகற்றப்படாமல் அதே இடத்தில் இருப்பதால் மக்கள் தொடர்ந்தும் நோய்களால் பாதிப்படைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், உடன் தேங்கி காணப்படும் குப்பைகளை அகற்றுமானும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜனவரி 10... உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை : தனிநாடு குறித்து சிந்தித்த ஈழத் தமிழர்கள்...! 2 மணி நேரம் முன்
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும்
19 மணி நேரம் முன்