போதைப்பொருளுடன் சிக்கிய பிரதேச சபை உறுப்பினர்
கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை பதுளை - பல்லேவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் (Samagi Jana Balawegaya ) பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
அத்துடன், சந்தேகநபர் பிரதேச சபை உறுப்பினராக இருப்பதுடன், ஹாபத்கமுவ மின்சார வேலி பாதுகாப்பு உதவி உத்தியோகத்தராகவும் கடமையாற்றுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, காவல்துறை உளவாளி ஒருவரைப் பயன்படுத்தி மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, விற்பனைக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த 86 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்