வலையில் சிக்கிய அரிய வகை மணி சிங்கி இறால்: பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை
Fishing
Tamil nadu
India
By Kiruththikan
மணி சிங்கி இறால்
இராமேஸ்வரம் - பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவரின் வலையில் அரியவகை இறால் இனங்களை சேர்ந்த மணி சிங்கி இறால் சிக்கியுள்ளது.
இவ்வாறு சிக்கிய இறாலின் எடை சுமார் 2.5 கிலோ என தெரியவந்துள்ளது.
குறித்த இறால் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையானதால் மகிழ்ச்சியடைந்துள்ளதாக மீனவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரியவகை இறால் மருத்துவ குணம் உள்ளதால் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
