கர்ப்ப கால மேக்கப் - கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா ...!
கர்ப்பிணிகள் மேக்கப் போடுவதில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேக்கப் பொருட்களில் உள்ள இரசாயன கலவைகள் வயிற்றில் இருக்கும் கருவை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் எனவே மருத்துவரிடம் ஆலோசனை செய்து மேக்கப் போட்டுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு
குறிப்பாக செயற்கை நிறங்கள் மற்றும் அமிலம் கொண்ட மேக்கப் பொருட்களை தவிர்ப்பது நல்லது என்றும் செயற்கையான கெமிக்கலில் இருக்கும் சில பொருள்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நெயில் பொலிஷ்
நெயில் பொலிஷ் போன்ற இரசாயன கலவையை பயன்படுத்தினால் நாம் சாப்பிடும் போது அதில் உள்ள இரசாயன கலவை வயிற்றில் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்போது கர்ப்பமாக இருக்கும் பெண்களின் கருவில் உள்ள குழந்தைக்கு இது பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே கர்ப்ப காலத்தில் பெரும்பாலும் மேக்கப் போடுவதை தவிர்ப்பது நல்லது என்றே கூறப்படுகிறது