அரச பணியாளர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றம்
corona
sri lanka
people
By Shalini
அரச சேவையிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அரச நிறுவனங்களின் பிரதானிகளினது தீர்மானத்துக்கமைய, வாரத்துக்கு ஒரு குழுவினர் என்ற அடிப்படையில் இரு குழுக்களாக பிரித்து பணியாளர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான விடயமும் குறித்த சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி