அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் திரைமறைவில்!
SLPP
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
UNP
By Vanan
உள்ளூராட்சி சபைத் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் மறுபுறத்தில் அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை அரசாங்கம் திரைமறைவில் செய்து வருவதான தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, அடுத்த அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் பேச்சு நடத்தியுள்ளன.
ரணிலை களமிறக்குவதே திட்டம்
சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் உட்பட மொட்டுக் கட்சி அமைச்சர்கள் சிலர் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக களமிறக்குவதே அவர்களின் திட்டம் எனக் கூறப்படுகிறது.
தற்போதைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி