இலங்கையில் எகிறும் பொருட்களின் விலை! நாட்டின் பிரதான நகரங்களை முற்றுகையிட முடிவு
Protest
people
Chilaw
Ratnapura
Badulla
SriLanka
Trincomlee
Anurathapura
JVP Protest
By Chanakyan
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருளின் விலையேற்றம் உட்பட முக்கிய பிரச்சினைகளை மையப்படுத்தி - அதனை கண்டித்து நாட்டின் பிரதான நகரங்களில் மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) ஆர்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.
அதன்படி குறித்த ஆர்ப்பாட்டங்களை இன்றும், நாளையும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இன்றைய தினம் மகரகம, கிரிபத்கொட, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, தம்புள்ளை, நீர்கொழும்பு, அநுராதபுரம் மற்றும் கினிகத்தேனை ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும் பதுளை, திருகோணமலை, பாணந்துறை, குருநாகல் மற்றும் சிலாபம் உள்ளிட்ட மேலும் சில நகரங்களில் நாளைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May like This
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி