சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் - சஜித்தை பிரதமராக்க ரணில் இணக்கம்..!
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Sri Lanka
Sri Lankan political crisis
By Kiruththikan
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயார் என அதிபர் கூறியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயார் என அதிபர் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுபான்மை கட்சிகளுடன் அதிபர் நடத்திய சந்திப்பின் போது இந்த விடயம் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒத்துழைப்பு வழங்கத் தயார்
தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என சிறுபான்மை கட்சிகள் உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தனித் தனி நபர்களாகவோ தனிக் கட்சிகளாவோ அன்றி சஜித் தலைமையிலான ஒட்டுமொத்த ஐக்கிய மக்கள் சக்தியும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதே பொருத்தமானது என அதிபர் கூறியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி