ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி : ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிவிப்பு
Anura Kumara Dissanayaka
Hospitals in Sri Lanka
By Jaso
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது.
ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், இச்செய்திகள் பொய்யானவை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், இத்தகைய வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான அறிவித்தல்
மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை உத்தியோகபூர்வ மூலங்கள் ஊடாகச் சரிபார்க்காமல், சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறும் ஜனாதிபதி அலுவலகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்