ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பறக்க போகும் ஜனாதிபதி அநுர!
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நாளைய தினம் (09.02.2025) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) செல்கிறார்.
இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.
எதிர்வரும் வியாழக்கிழமை வரை அங்கு தங்கியிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர், குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி உள்ளிட்ட இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளனர்.
ஜனாதிபதி அநுர
மேலும் துபாயில் இடம்பெறுகின்ற உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார்.
அத்துடன் உச்சிமாநாட்டில் கலந்துக்கொள்ளும் ஏனைய நாடுகளின் தலைவர்களுடனும் இருதரப்பு சந்திப்புகளில் கலந்துக்கொள்வார்.
தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளுடனான ஒத்துழைப்புகள் தொடர்பில் இந்த விஜயத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.
இலங்கை தேயிலை
குறிப்பாக எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்முதல், மின்சாரம் மற்றும் எரிசக்தி திட்டங்கள், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பான சுமார் 12 ஒப்பந்தங்களில் இலங்கை கையெழுத்திட உள்ளது.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் ஒரு கூட்டு ஆணைக்குழுவை உருவாக்குவது இந்த விஜயத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
இலங்கை தேயிலை மற்றும் மாணிக்க கற்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் இதன் போது கவனம் செலுத்தப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)