சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி : நயினாதீவு விகாராதிபதியைச் சந்தித்த ஜனாதிபதி அநுர
யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்கவை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சற்றுமுன்னர் சந்தித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி இன்று (16) நயினாதீவுக்கு சென்ற நிலையில் நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
அண்மைக்காலமாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தையிட்டி விகாரை தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நயினாதீவு விகாராதிபதி அதிருப்தி
இதேவேளை எந்த ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வந்தாலும் தன்னை வந்து சந்திப்பார்கள் என்றும் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு ஐந்து தடவை வந்தபோதும் தன்னை சந்திக்க வரவில்லை என நயினாதீவு விகாராதிபதி அண்மையில் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அத்துடன் தையிட்டி விகாரை பொறுப்பை தன்னிடம் தந்தால், தையிட்டி விகாரை பிரச்சினைக்கு தீர்வு வழங்க தயார் என நயினாதீவு விகாராதிபதி அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததுடன், தையிட்டி பகுதியில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை நேரில் சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |