ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு : முக்கிய அமைச்சர்களுடன் விரிவான பேச்சு

Anura Kumara Dissanayaka Vijitha Herath Delhi India Anil Jayantha Fernando
By Jaso Dec 15, 2024 05:22 PM GMT
Report

புதிய இணைப்பு

இந்திய நிதியமைச்சர், வெளிவிவகார அமைச்சர்களுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று (15) இரவு, இந்திய நிதி மற்றும் கூட்டுத்தாபன விவகார அமைச்சர் நிர்மலா சீதா ராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சருடன் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் நிர்மலா சீதா ராமன் ஆகியோர் இந்திய - இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு : முக்கிய அமைச்சர்களுடன் விரிவான பேச்சு | President Anura Receives Warm Welcome In India

மேலும் இந்தியர்களை இலங்கைக்கு அழைத்து வருதல், விவசாய நவீனமயமாக்கல் மற்றும் இலங்கையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய பேச்சு

இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோரிடையே நடைபெற்ற சந்திப்பில், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியாவின் பாரிய சந்தையைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இந்த நாட்டில் சுற்றுலா, முதலீடு மற்றும் எரிசக்தி துறைகளுக்கு ஆதரவளிக்க இந்திய அரசு ஒப்புக்கொள்கிறது என்றும் ஜெய்சங்கர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு : முக்கிய அமைச்சர்களுடன் விரிவான பேச்சு | President Anura Receives Warm Welcome In India

கடற்றொழில் மற்றும் தேசிய ஒற்றுமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகள் குறித்து கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.

இந்த கலந்துரையாடல்களின் பின்னர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.   

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு : முக்கிய அமைச்சர்களுடன் விரிவான பேச்சு | President Anura Receives Warm Welcome In India

முதலாம் இணைப்பு

இந்தியாவிற்கான(india) பயணத்தை மேற்கொண்டள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(anura kumara dissanayake) இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார்.

இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன்,(murugan) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா(Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால், இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பானவரவேற்பை அளித்தனர். 

இந்திய ஊடகங்கள் சிறப்பாக பிரசாரம் 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் சிறப்பாக பிரசாரம் செய்திருந்ததுடன், புதுடில்லி நகரின் பிரதான சுற்றுவட்டாரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு : முக்கிய அமைச்சர்களுடன் விரிவான பேச்சு | President Anura Receives Warm Welcome In India

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்(jaishakar), இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால்(ajith doval) உள்ளிட்டவர்களை இன்று (15) இரவு சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்தியாவிற்கு பறந்தார் ஜனாதிபதி அநுர

இந்தியாவிற்கு பறந்தார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதியுடன் சென்றோர்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath), தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ(anil jayantha fernando) உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.  

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு : முக்கிய அமைச்சர்களுடன் விரிவான பேச்சு | President Anura Receives Warm Welcome In India

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை : பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை : பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



Gallery
ReeCha
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026