வடக்கிற்கு வீதியால் பயணிக்கும் அநுர: உலங்குவானூர்தியை பயன்படுத்த வலியுறுத்து!
வடக்கிற்கு வீதிகள் வழியாக பயணம் செய்யும் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முக்கியமான முடிவுகளை எடுக்க அவர் செலவிடக்கூடிய மதிப்புமிக்க நேரத்தை வீணாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.
இன்றைய (24.2.2025) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் பயணம் செய்யும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura kumara Dissanayake) உலங்குவானூர்திகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய முடிவுகள்
உலங்குவானூர்திகளின் மூலம் பயணம் செய்தால் ஜனாதிபதி முக்கியமான முடிவுகளை எடுக்க அதிக நேரம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தனது இல்லத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், இதனை மூடிவைத்திருப்பதன் மூலம் நாடு என்ன நன்மையை அனுபவிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்