காவல்துறையினரால் நடத்தப்படும் நாடகம் : திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட துப்பாக்கிதாரிகள்
கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காவல்துறையினரால் நாடகம் நடத்தப்படுவதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெறும் அனைத்து கொலைகளுக்கும் தொடர்ச்சியாக காவல்துறையினரால் ஏதாவது நாடகம் நடத்தப்பட்டு கொண்டே இருக்கின்றது.
காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு காவல்துறையினராலேயே குற்றவாளிகள் கொல்லப்படும் பட்டியலில் இலங்கைக்குத்தான் முதலிடம் வழங்கப்பட வேண்டும், இது கவனத்திற்குட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
காரணம் குற்றவாளியையும் கொன்று பாதிக்கப்பட்டவரும் இறந்து காரணம் தெரியாமல் ஆக்கப்படுகின்றது.
கைவிலங்கிடப்பட்டு கடினமாக கட்டப்பட்டுள்ள ஒரு குற்றவாளி எவ்வாறு திருப்பி காவல்துறையினரை தாக்க முற்படுவார் ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னணி, துப்பாக்கிதாரிகளை காவல்துறையினர் படுகொலை செய்தமைக்கான காரணம் மற்றும் தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
