தேசபந்து தென்னகோனுக்கு எதிரான விசாரணை - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களின் விசாரணைக்கான திகதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இந்த மனுக்கள் இன்று (24.02.2025) பிரீத்தி, பத்மன் சூரசேன, யசந்த கோடகொட, ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஷிரான் குணரத்ன மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்டது.
இடைக்காலத் தடை உத்தரவு
இதன்போது பிரதிவாதி தேசபந்து தென்னகோன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரர் காவல்துறை மா அதிபராக தனது கடமைகளைச் செய்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த மனுவை விரைவாக விசாரிக்க திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரினார்.
இதனடிப்படையில் முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, தொடர்புடைய மனுக்களை மே மாதம் 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.
கார்டினல் மால்கம் ரஞ்சித், இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் பிற கட்சிகளால் ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
