இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு சிக்கல் : பாதுகாப்புச் செயலாளரின் அதிரடி உத்தரவு
பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபை கூடி இன்று (24) காலை ஆராய்ந்தது.
இதில் கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா (Sampath Thuyacontha) குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
நாட்டின பாதுகாப்பு
அத்தோடு, நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்திருந்தார்.
கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு நேற்று (23) விஜயம் மேற்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும் என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
