நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு : சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் காரணமான சுற்றுலாத்துறை மீண்டும் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை சிறு மற்றும் நடுத்தர சுற்றுலா கைத்தொழிற்துறையினரின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவிலான சுற்றுலா தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் சமீர சேனக டி சில்வா (Sameera DE Silva) தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாளாந்தம் பல பகுதிகளில் தற்போது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இது சுற்றுலாத்துறைக்கு நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த சம்பவங்களால் வீதியில் சுதந்திரமாக செல்வதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சியை ஏற்படுத்துவதில் இது நேரடியாக தாக்கம் செலுத்தக்கூடும். நாட்டுக்குவரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு காரணமாக குற்ற வலையமைப்பு ஒழுக்கப்படவில்லையாயின் நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
