யாழ். பதில் அரச அதிபரின் மகன் பயணித்த சொகுசு வாகனம் விபத்து - அரச அதிபரின் மனைவி முகநூல் பதிவு

Sri Lanka Police Jaffna Jaffna Teaching Hospital Accident
By Thulsi Feb 24, 2025 04:04 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் மகன் பயணித்த வாகனமானது விபத்துக்குள்ளானதில் அரச அதிபரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (23.2.2025) யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் கந்தர்மடம் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து அரச அதிபரின் மனைவி ஒரு முகநூல் பதிவை வெளியிட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய யாழ் மாவட்ட செயலாளரின் மகன் செலுத்திய சொகுசு வாகனம்

விபத்தில் சிக்கிய யாழ் மாவட்ட செயலாளரின் மகன் செலுத்திய சொகுசு வாகனம்

மது போதையில் வாகனத்தை செலுத்தினார் 

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "மாவட்ட செயலாளரின் மகன் அரச வாகனத்தில் பயணிக்கும் போது பாரிய விபத்துக்கு உள்ளானார்.

யாழ். பதில் அரச அதிபரின் மகன் பயணித்த சொகுசு வாகனம் விபத்து - அரச அதிபரின் மனைவி முகநூல் பதிவு | Jaffna Govt Agent Son Vehicle Accident In Jaffna

இதனை பல சமூக ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டமையை காணமுடிகின்றது. இதில் உண்மைக்குப் புறம்பாக அரச வாகனம் விபத்துக்குள்ளானது என்றும், மதுபோதையில் வாகனத்தை செலுத்தினார் என்றும் செய்திகள் வெளிவந்தன.

அச்செய்திகளுக்கான உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதற்காகவே இப்பதிவு இடப்படுகின்றது.

யாழ். இந்துக்கல்லுரியில் 2023 கணிதப்பிரிவில் கல்வி கற்ற எனது மகன் பழைய மாணவர்களின் கூட்டம் ஒன்றிற்காக தனது நண்பர்களுடன் சொந்த வாகனத்தில் சென்று கொண்டு இருக்கும் போதே பலாலி வீதியில் இவ் விபத்து ஏற்பட்டது.

அவர் அரசாங்க வாகனத்தில் பயணிக்கவில்லை எமது தனிப்பட்ட வாகனத்தையே பாவித்தார் என்பதுடன் அவர் மது போதையில் வாகனத்தை செலுத்தியிருக்கவில்லை என்பதும் காவல்துறையினராலும் வைத்தியசாலையாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மோதலில் மூன்று பல்கலை மாணவர்கள் படுகாயம்

மோதலில் மூன்று பல்கலை மாணவர்கள் படுகாயம்

உண்மைக்கு புறம்பாக தனிப்பட்ட விரோதம்

Steering track ஆன நிலையில் மரத்தோடு மோதி நிறுத்தியுள்ளார். இதில் வாகனம் பாரிய சேதத்திற்குள்ளான போதிலும் எனது மகனும் அவருடைய நண்பர்களும் எந்த வித உயிர் ஆபத்தும் இன்றி இறைஅருளால் காப்பாற்றபட்டுள்ளார்கள்.

யாழ். பதில் அரச அதிபரின் மகன் பயணித்த சொகுசு வாகனம் விபத்து - அரச அதிபரின் மனைவி முகநூல் பதிவு | Jaffna Govt Agent Son Vehicle Accident In Jaffna

உடனுக்கு உடன் செய்திகளை வழங்குவது ஊடகங்களின் பொறுப்பு. ஆனால் உண்மைக்கு புறம்பாக தனிப்பட்ட விரோதங்களினாலோ அல்லது காழ்ப்புணர்ச்சியினாலோ அல்லது விறுவிறுப்பான செய்திகளை வழங்க வேண்டும் என்ற ஆதங்கத்தினாலோ சம்பந்தபட்டவர்களை எவ்வளவு பாதிக்கும் என்று சிறிதளவு எண்ணமும் இல்லாமல் ஊடகங்கள் பொறுப்பு இன்றி செயற்படுவது வேதனை அளிக்கின்றது.


விபத்து என்பது யாருக்கும் எப்பொழுதும் நிகழலாம். ஒரு விபத்து சம்பவத்தை காரணம் காட்டி அரச அதிபரின் பதவிக்கு களங்கம் ஏற்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செய்திகள் வெளியிடப்பட்டமையை என்னால் அவதானிக்க முடிந்தது.

முகம் காட்டாது பொறுப்பற்ற விதத்தில் என் பிள்ளைகளின் மனதை பாதிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது.

எனினும் உண்மை செய்திகளை வெளியிட்ட ஊடகங்களும் ஆறுதல் வார்த்தைகளை கூறிய அன்புள்ளங்களும் நிறையவே இருக்கின்றன அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். பதில் அரச அதிபரின் மகன் பயணித்த சொகுசு வாகனம் விபத்து - அரச அதிபரின் மனைவி முகநூல் பதிவு | Jaffna Govt Agent Son Vehicle Accident In Jaffna

செய்திகள் - கஜிந்தன்

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் அட்டகாசம் - படுகாயமடைந்த நால்வரில் ஒருவர் பலி

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் அட்டகாசம் - படுகாயமடைந்த நால்வரில் ஒருவர் பலி

You may likr this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023