விபத்தில் சிக்கிய யாழ் மாவட்ட செயலாளரின் மகன் செலுத்திய சொகுசு வாகனம்
யாழ் (Jaffna) மாவட்ட செயலாளர் ம.பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் சிக்கி மாவட்ட செயலாளரின் மகனும் மற்றும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சொகுசு வாகனம்
அதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேகா ரக மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.
விபத்தில் வாகனத்தை செலுத்தி சென்ற மாவட்ட செயலாளரின் மகன் ஆதி என்பவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
அத்தோடு, சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த ஆதியின் நண்பர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இந்தநிலையில், அவரது கால்கள் வாகனத்தினுள் சிக்குப்பட்டமையால் சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னரே அவர் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த வாகனம் மாவட்ட செயலாளரின் உத்தியோக பூர்வ வாகனம் எனவும் அதனை சாரதி இன்றி மாவட்ட செயலாளரின் மகனே செலுத்தி சென்று விபத்துக்குள்ளாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்