மோதலில் மூன்று பல்கலை மாணவர்கள் படுகாயம்
ஊவா(uva) வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர் குழுக்களுக்கு இடையே இன்று (23) இடம்பெற்ற மோதலில், தடிகளாலும் இரும்பு கம்பியாலும் தாக்கப்பட்ட மூன்று மாணவர்கள் காயமடைந்து பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
அக்போபுர, கந்தளாய், கடுவெல வீதி, அதுருகிரிய, மற்றும் கோதடுவவத்த, பெத்தேகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 வயதுடைய மூன்று மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முகத்தில் காயங்கள்
பதுளை போதனா மருத்துவமனையின் விடுதி எண் 9 இல் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இரும்பு கம்பிகளால் தாக்குதல்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் இரு குழுக்களிடையே நேற்று (22) இரவு தகராறு ஏற்பட்டதாகவும், தொழில்நுட்ப பீடத்தின் இறுதியாண்டு மாணவர்கள் மூவர் மைதானத்தில் இருந்தபோது இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
