நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ள ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு மாகாணத்திலும் வெற்றி பெறுவதற்காக தேசிய மக்கள் சக்தி (NPP) செயற்பட்டு வருகின்றது.
இதற்கமைய ஜனாதிபதி யாழ் விஜயத்தின் போது நல்லூர் - கிட்டுப்பூங்காவில் மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் விஜயம் செய்தனர்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் நோக்கிலேயே ஜனாதிபதியின் வருகை அமையவுள்ளது.
அத்துடன் அடுத்து வரும் நாட்களில் ரில்வின் சில்வா (Tilvin Silva) உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர்களும் வடக்குக்கு படையெடுத்து தீவிர பரப்புரைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya), வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) ஆகியோர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து பிரசாரங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

