கோட்டாபயவிற்கு எதிரான வெள்ளை வான் கடத்தல் வழக்கு - திடீர் பல்டி அடித்த சாட்சி!

Dr Rajitha Senaratne Gotabaya Rajapaksa Sri Lanka Sri Lanka Magistrate Court
By Kalaimathy Mar 03, 2023 09:29 AM GMT
Report

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குமூலம் பொய்யானது என நீதிமன்றில் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, பொய் சாட்சியம் வழங்கியவர்களில் ஒருவரான வழக்கின் இரண்டாவது சாட்சி அதுல சஞ்சீவ மதநாயக்க தாம் பொய் சாட்சியம் வழங்கியமையை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சிறிலங்கா சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான சர்ச்சைக்குரிய வெள்ளை வான் வழக்கின் பிரதான சாட்சியங்களில் ஒருவர், நீதவான் முன்னிலையில் தாம் வழங்கிய இரகசிய வாக்குமூலம் பொய்யானது என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

வெள்ளை வான் சர்ச்சை

கோட்டாபயவிற்கு எதிரான வெள்ளை வான் கடத்தல் வழக்கு - திடீர் பல்டி அடித்த சாட்சி! | President Election 2019 Gotabaya White Van Court

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச குறித்து பொய்யான வாக்குமூலங்களை வழங்கியமை உள்ளிட்ட பதினான்கு குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இலங்கை மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணையே நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்ற போது சாட்சியாளர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

இருப்பினும் முன்னர், மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சாட்சியாளரான மதநாயக்க, ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியது தனது வாழ்வில் எதிர்கொண்ட உண்மை சம்பவம் என தெரிவித்திருந்தார். 

பொய்யான வாக்குமூலம்

கோட்டாபயவிற்கு எதிரான வெள்ளை வான் கடத்தல் வழக்கு - திடீர் பல்டி அடித்த சாட்சி! | President Election 2019 Gotabaya White Van Court

இவ்வாறான நிலையிலேயே நேற்று வழங்கிய சாட்சியத்தின் போது, அப்போதைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரின் செல்வாக்கு காரணமாக கொழும்பு பிரதான நீதவானிடம் பொய்யான வாக்குமூலமொன்றை வழங்க தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடும்ப நல்வாழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றி யோசித்த பிறகு இந்த தவறான அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிடியாணை

கோட்டாபயவிற்கு எதிரான வெள்ளை வான் கடத்தல் வழக்கு - திடீர் பல்டி அடித்த சாட்சி! | President Election 2019 Gotabaya White Van Court

இதேவேளை, சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றில் முன்னிலையாகாத குற்றச்சாட்டின் பேரில் முதலாவது சாட்சியான சரத்குமாரவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024