இந்திய நிதியமைச்சரை சந்தித்த ரணில் விக்ரமசிங்க : இருதரப்பு உறவுகள் குறித்தும் பேச்சு
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் இன்று இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இருதரப்பு கலந்துரையாடலுக்கான இந்திய தூதுக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் இந்த சந்திப்பு சற்று முன்னர் இடம்பெற்றதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் போது, இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தின் 15 மில்லியன் டொலர் அன்பளிப்புடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் பரிமாறப்பட்டுள்ளது.
President @RW_UNP met the visiting Indian Finance Minister @nsitharaman, Indian High Commissioner Gopal Baglay and the Indian delegation for bilateral discussions at the President's House in Colombo a short while ago. #DiplomacyLK #LKA #PMD @SLinIndia
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) November 2, 2023