தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ரணில் விசேட அறிவிப்பு
Sri Lankan Tamils
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
By Vanan
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எதிர்பார்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்த நிலையில், விசேட உரையொன்றை வழங்கும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் உரை வழங்கிய அவர், “அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வு காண முடியும்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படும். கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாக” அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேட உரை

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்