உயிர் தியாகம் செய்த விமானியின் உடலுக்கு அரசியல் தலைமைகள் அஞ்சலி !

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Sri Lanka Floods In Sri Lanka NPP Government
By Kanooshiya Dec 04, 2025 09:44 AM GMT
Report

புதிய இணைப்பு

வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஞ்சலி செலுத்தினார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் உத்தியோகபூர்வ பணிகளுக்காக மேற்கொண்ட பல பயணங்களில் குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டிய விமானியாக இணைந்து செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிர் தியாகம் செய்த விமானியின் உடலுக்கு அரசியல் தலைமைகள் அஞ்சலி ! | President Pays Tribute To The Pilot

முதலாம் இணைப்பு

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (04.12.2025) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வென்னப்புவ, லுனுவில பகுதியில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கச் சென்றபோது ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி அதன் தலைமை விமானி உயிரிழந்தார்.

அதன்படி, உயிரிழந்த விமானியின் இறுதிச் சடங்குகள் இன்று (04.12.2025)  முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெறவுள்ளன. 

முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்

முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்

ஜனாதிபதி அஞ்சலி

இந்நிலையில், ஜனாதிபதி நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கும் தனது இரங்கல்களை தெரிவித்துக் கொண்டார்.

உயிர் தியாகம் செய்த விமானியின் உடலுக்கு அரசியல் தலைமைகள் அஞ்சலி ! | President Pays Tribute To The Pilot

இதேவேளை, உயிரிழந்த தலைமைய விமானியின் சேவைகளைப் பாராட்டும் விதமாக, நவம்பர் 30 ஆம் திகதி முதல் விங் கமாண்டர் பதவியில் இருந்து குரூப் கேப்டன் பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதுடன் கொழும்பு பல்கலையின் உபவேந்தர் மூலம் நேற்றைய தினம் (03.12.2025) அவர் பெற்ற பட்டச் சான்றிதழ் அவரது பூதவுடலுக்கு சமர்பிக்கப்பட்டது.

மேலும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதமாச, முன்னாள் இராணுவப் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களும் இன்று காலை தலைமை விமானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

'டித்வா' புயலால் பறிபோன 479 உயிர்கள்: தீவிரமடையும் மீட்பு பணி!

'டித்வா' புயலால் பறிபோன 479 உயிர்கள்: தீவிரமடையும் மீட்பு பணி!

நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 5 கடற்படை வீரர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 5 கடற்படை வீரர்களில் ஒருவரின் சடலம் மீட்பு



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016