இலங்கைக்கு கிட்டாது போன ஆசியாவின் மிகச் சிறந்த கல்வித்துறை
Ranil Wickremesinghe
Sri Lanka
By Vanan
அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் அதிபர் தெரிவித்தார்.
ஆசியாவின் மிகச் சிறந்த கல்வித்துறை

கடந்த பத்து வருடங்களில் சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட பணத்தை கல்விக்காக செலவிட்டிருந்தால் ஆசியாவின் மிகச் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும் எனவும் அதிபர் வலியுறுத்தினார்.
திறன் மற்றும் தொழில் கண்காட்சியான "skills Expo 2023" நிகழ்வில் நேற்று (12) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.